கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 2025 ஆண்டுக்கான உலக கேடட் சேம்பியன் ஷீப் போட்டியில் 10 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் 80 நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் சரவணன்-அன்பு ரோஜா அவர்களின் மகள் ஷர்வாணிகா முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார்.
அவரை இல்லம் சென்று உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி, காங்கிரஸ் மாவட்ட துணைப் பொதுச்செயலாளர் ராஜா ஜெயராமன், திமுக முன்னோடிகள் துருவேந்திரன், பெரியாக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர். விசுவநாதன், இலைகடம்பூர் காமராஜ் ஆகியோர் வாழ்த்தினர்.
