• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குவாரி திட்டம் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம்..,

ByT. Balasubramaniyam

Oct 8, 2025

அரியலூர் மாவட்டம் ,கீழப்பழுவூர் கிராமம் புல எண்.189/2A, 2B, 190/1A, 1B, 2, 4 & 5 மற்றும் கருப்பூர் சேனாபதி கிராமம் புல எண்.31/1 அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம் 3.54.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கருப்பூர் சேனாபதி மற்றும் கீழப்பழுவூர் சுண்ணாம்புக் கன்கர் குவாரி திரு.எஸ்.சுப்ரமணியன் r அவர்களின் குவாரி திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் கீழப்பழுவூர் கிராமம், கீழப்பழுவூர் தனலெட்சுமி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இத்திட்டம் செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக் கப்பட்டது. மேலும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் , விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் 4D, பனகல் மாளிகை, சைதாப்பேட்டை சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும் இக்கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மாசுக்கட்டுபாடுகள் குறித்தும் மற்றும் கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் தங்களின் கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்களை பதிவு செய்தார்கள். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா .பொ.இரத்தினசாமி தெரிவித்தார்;.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இராஜராஜேஸ்வரி அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, வட்டாட்சியர் முத்துலெட்சுமி அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.