மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 17,21 வார்டு பகுதி மக்களுக்காக உசிலம்பட்டியில் தனியார் மண்டபத்திலும், நாட்டாமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் மக்களுக்காக நாட்டாமங்கலம் ஆதிசிவன் கோவில் மண்டபத்திலும் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது.,

காலை 9 மணிக்கு துவங்கிய இந்த முகாமிற்கு பெருமளவு மக்கள் மனு அளிக்க வராத சூழலில் வெறிச்சோடியே காணப்படுகிறது., அரசு அலுவலர்களும் மக்கள் மனு அளிக்க வராததால் செல்போன்களில் பொழுது போக்கும் சூழல் உருவாகியுள்ளது, இதனால் அலுவலக பணிகளை செய்ய முடியாத நிலை நீடித்து வருவதால் பெரும்பாலான அரசு அலுவலக பணிகள் மந்த நிலையை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.,
அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெற்று வரும் இது போன்ற முகாம்களினால் ஏற்கனவே நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு குறித்து ஆய்வு செய்து உண்மை நிலை அறிந்து தீர்வு காண முடியாத நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது.,