• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நிரம்பி வருகின்ற லெட்சுமி தீர்த்த குளம்..,

ByKalamegam Viswanathan

Oct 7, 2025

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் புனரமைக்கப்பட்ட லெட்சுமி தீர்த்த குளமானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிரம்பி வருகிறது.

தெய்வானை அம்பாளுக்காக உருவான தீர்த்த குளம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில்25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும் 66 மீட்டர் அகலமும் கொண்ட லெட்சுமிதீர்த்த குளம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த தீர்த்தக்குளமானதுதெய்வானை அம்பாளுக்காக உருவாக்கப்பட்டதாக செவிவழிசெய்திகூறுகிறது. முன்னோர்காலத்தில் இந்த குளம்வற்றாத புனித தீர்த்த குளமாக இருந்து வந்துள்ளது.கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவரும் லெட்சுமி தீர்த்த குளத்தில் உள்ள தண்ணீரை தங்களது கைகளில் அள்ளி கண்களில் ஒற்றிக் கொண்டும், தலையில்தெளித்தும்,கை கால்களை அழம்பிய பிறகே கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். மேலும் அவர்கள்குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி வாங்கிபோட்டு மகிழ்ந்துவந்தனர்.

குறிப்பாக தேமல், பருஉள்ளவர்கள் உப்பு, ,மிளகு வாங்கி போட்டு வந்தனர். அதில் நோய் குணமாகி வந்துள்ளது.ஆகவே இந்த குளத்தைபுண்ணிய புனித தீர்த்த குளமாகபோற்றி பாதுகாத்து வந்தனர், ரூ.6.50 கோடியில் புனரமைப்பு இத்தகைய லெட்சுமி தீர்த்த குளமானது சமீப்பத்தில்சுற்றுச் சுவர் சேதமானது. நாளடைவில் தண்ணீர் வற்றியது.
இதனையடுத்து அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியாபாலாஜி தலைமையிலான அறங்காவலர்கள் லெட்சுமி தீர்த்த குளத்தை புனரமைக்க முடிவு செய்தனர்.

அதன்படி ரூ.6 கோடியே 50 லட்சத்தில்பழமை மாறாமல் அதிநவீன தொழில்நுட்பத்துடன் குளத்தின் 3 பக்கமும் கற்கள் கொண்டு சுற்றுச்சுவரும், மற்றொரு பக்கத்தில் கான்கிரிட்டிலான சுவரும் கட்டப்பட்டு புனரமைக்கப்பட்டது. தொடர் மழையால் நிரம்புகிறது.

இந்த நிலையில் பக்தர்கள் பயன்பாட்டுக்காக கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி அன்று
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கி காணொளி மூலம் லெட்சுமி தீர்த்த குளத்தைதிறந்து வைத்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரக்கூடியமழையால் லெட்சுமி தீர்த்த குளம்நிரம்பி வருகிறது.தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில்ஒரு சில நாளில் தீர்த்த குளம் முழுவதுமாக நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனையடுத்து சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலுக்கு வரக்கூடியபக்தர்கள் சுற்றுலா பயணிகள் லெட்சுமி தீர்த்த குளத்தை மீண்டும் வழக்கம் போல பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது.