சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்ததைத் தொடர்ந்து,ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,
ஜெயங்கொண்டம் ஒன்றியம்,குண்டவெளி ஊராட்சி காவெட்டேரி கிராமத்தில்நடைபெற்ற காணொளி காட்சி நிகழ்ச்சியில் ,ரூ 60.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 வீடுகளை, மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, தொடங்கி வைத்து பழங்குடியினர்களுக்கு வீடுகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் ஆர் ஷீஜா,மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பி.சுமதி, வட்டாட்சியர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி வ.ஊ), ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் இரா.மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் சிஆர் எம் பொய்யாமொழி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எம்.ஜி.இராஜேந்திரன்,மாவட்ட இலக்கிய அணி தலைவர் ஆர் வீராசாமி மற்றும் அரசு அலுவலர்கள்,பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
