மக்களைக் காப்பாத்துவோம்!
வித்தியாச அரசியல்வாதி ஜெகநாத் மிஸ்ரா
செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணம் அடைந்தது தேசிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனருமான ஜெகநாத் மிஸ்ரா, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் மற்றும் படுகாயமடைந்த குடும்பத்தார்களை 28.09.25 கரூரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நிவாரண உதவிகளையும் அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நமது மக்கள் முன்னேற்றக்கழகம் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியும் அளித்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகநாத் மிஸ்ரா,
“இந்த சம்பவமானது ஒரு துயரமான ஒரு விபத்தாகவே நாம் கருதுகின்றோம். அது ஒரு கருப்பு இரவாக அமைந்துவிட்டது.
இந்த மரணம் என்பது ஏற்றுக் கொள்ள முடிபயாதது. இன்றைய தமிழக மக்கள் அத்தனை பேரும் தங்கள் இல்லத்தில் ஒரு துயர சம்பவம் ஏற்பட்டு விட்டதாக நினைத்து கலங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் யார் மீது தவறு என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல், ஒருவரை ஒருவர் அரவணைத்து செல்ல வேண்டும்.
இறந்தவர்களுக்கு அரசு 10 லட்சம் ரூபாய் அறிவித்திருக்கிறார்கள். 25 லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும்.
அதேபோல தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் மிக பெரிய அளவில் மன அழுத்தத்தில் இருப்பார். அவருக்கும் அவருடைய தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கும் எங்களுடைய ஆறுதல்களை கூறிக்கொள்கிறோம்.
நடிகர் விஜய் அவர்கள் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தாரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்க வேண்டும் என்று இந்த நேரத்திலே கோரிக்கை விடுக்கிறோம்.
யார் மீது தவறு என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல், பாதிக்கப்பட்ட நம்முடைய மக்கள் மீண்டும் வருவதற்கு வழி காண வேண்டும்.
விஜய் அவர்களுக்கு இந்த விஷயத்தில் என்றென்றும் நாங்கள் சார்ந்திருக்க கூடிய நமது மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவாக ஆறுதலாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார் ஜெகநாத் மிஸ்ரா
