கரூரில் இருந்து கள ரிப்போர்ட்!
செப்டம்பர் 27 ஆம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய். மதியம் 2.15 டூ 3 20 வரை பரப்புரை செய்தார்.
அப்போது வெயில் உச்சத்தில் கிட்டத்தட்ட 15 பேருக்கு மேல் மயக்கம் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் புறப்பட்டு விஜய் சுமார் 6.45 மணியளவில் கரூர் பைபாஸ் ரோடு வந்தார்.
கூட்டம் அளவுக்கு மீறித் திரண்டிருந்த நிலையில் அந்த கூட்டத்துக்குள் அதாவது வேலுசாமி புரத்தில் விஜய்யின் பஸ் வந்தபோதே கூட்டத்தில் பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் தன்ணீர் தண்ணீர் என்று கூக்குரலிட, விஜய்யே தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டில்களை கூட்டத்தை நோக்கி வீசி எறிந்தார்.
விஜய் பேசும்போது, 10 ரூபாய் பாலாஜி என பேசியபோது தீடிரென ஒரு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விளக்குகள் அணைந்தன. ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. இதற்கிடையே விஜய் தனது பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
உடனடியாக காவல்துறை தவெக தொண்டர்கள் மத்தியில் தடியடியில் இறங்க, அங்குகிங்குமாக சிதறியது கூட்டம். அப்போதுதான் கிட்டத்தட்ட 1/1/2 வயது குழந்தை முதல் 41 பேர் கூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே இறந்தார்கள்.
இது ஒருபக்கம் இருந்தாலும் அந்த சமயத்தில் செல் போன்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் இடம் போர்க்களம் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. உடனடியாக அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மருத்துவமனைக்கு. 20 நிமிடங்களில் சென்றார். பின்னர் தான் மாவட்ட ஆட்சியர் முதல் மாவட்ட எஸ்பி வரை தகவல்கள் தீயாய் பரவியது. அமைச்சர்கள் மா.சு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனடியாக கரூர் வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தை கேள்விப்பட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் திக்குமுக்காடி போனார். அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அனுப்பி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உத்தரவு பிறப்பித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் உடனடியாக தமிழக உளவுத்துறை மற்றும் ஐ.பி போலீசார் விலாவாரியாக விசாரணை நடத்தி மாநில, மத்திய அரசுகளுக்கு .ஆதாரபூர்வமாக ரிப்போர்ட் அனுப்பிக்கொண்டிருந்தனர்.
பதறிப்போன தமிழக முதல்வர் ஸ்டாலின் நள்ளிரவு நேரத்தில் கரூர் வந்து இறந்து போனவர்களின் உடல்களும் அஞ்சலி செலுத்தினார். உடனடியாக இறந்த குடும்பங்களுக்கு. ₹10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு வெளியிட்டார். காயபட்ட நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் எனவும் அரசு தரப்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.
இரவோடு இரவாக சென்னை பனையூர் வீட்டிற்கு சென்ற விஜய் தூக்கம் இல்லாமல் தவித்த அவர். மத்திய உளவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. 28 ந்தேதி. காலை இறந்த போன அனைவருக்கும் தவெக சார்பில் ₹ 20 லட்சம் மற்றும் காயம் ஏற்பட்டால் ₹2 லட்சம் எனவும் விஜய் சார்பில் அறிவிப்பு வெளியானது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஜிபி வெங்கட்ராமன் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் ஆகியோர் விசாரித்து தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த ஆகியோர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத. வழக்கு பதிவு செய்ய காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
மேலும். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பேச்சாக பேசப்பட்டாலும் தமிழக முன்னாள் முதல்வர் எட்டப்பாடி பழனிச்சாமி மற்றும் பிஜேபி அண்ணாமலை தரப்பில் மின்சாரம் துண்டிப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது பெரும் குற்றச்சாட்டுகளை முன்நிறுத்தி பத்திரிகை யாளர்கள் மத்தியில் பேட்டி அளித்துள்ளார்கள்.
மேலும் தற்போது 114 பேருக்கு மேல் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் அருணா ஜெகதீசன் தலைமையிலான நீதிவிசாரணை கமிஷனை அமைத்துள்ளார். அதேநேரம் தவெக சார்பில் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு கூட கரூர் மக்கள் மத்தியில் அதிர்ச்சி விலகவில்லை.
