• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஊரடங்கு காலத்தில்**உணவுப் புரட்சி செய்த எடப்பாடியார்**கேடிஆர் அதிரடி தொடர் -20*

அம்மாவின் அரும்பெரும் சாதனை சமூக நீதித் திட்டமான அம்மா உணவகம் திட்டத்தை, அண்ணன் புரட்சித்தமிழர் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது எவ்வாறு கையாண்டார் என்பதை இப்போது நினைத்தாலும் உள்ளம் சிலிர்க்கும்.

சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அன்றாட பசிப்பிணி போக்கும் அட்சய பாத்திரமாக புரட்சித்தலைவி அவர்களின் அம்மா உணவகம் திட்டம் திகழ்ந்துகொண்டிருக்கிறது, இனியும் திகழப் போகிறது.

இந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தான்… உலகத்தையே உலுக்கும் வகையில் கொரோனா தொற்று பரவல் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நமது நாட்டில் தீவிரமானது.

மத்திய அரசு ஒவ்வொரு மாநில அரசுகளோடும் ஆலோசித்து, ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.

முதல் கட்டமாக 2020  மார்ச் 22 ஆம் தேதி ஜனதா ஊரடங்கு என்ற பெயரில் இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்பு வெவ்வேறு கட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டது.

தொழிற்சாலைகள் இயங்கவில்லை, அலுவலகங்கள் இயங்கவில்லை, கடைகள் கிடையாது, போக்குவரத்து கிடையாது… கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்த உலகம் அப்படியே முடங்கிப் போனது.

குறிப்பாக தமிழ்நாட்டில் அரசுக்கு வருவாய் ஈட்டி தருகின்ற அனைத்து துறைகளும் கிட்டத்தட்ட செயல் இழந்து கொண்டிருந்தன. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் எவ்விதமான இயக்கமும் இல்லாத நிலையில்… அதே நேரம் மக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அவசரமான கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக அப்போது தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த அண்ணன் எடப்பாடியார் இது குறித்து அரசு அதிகாரிகளிடமும் அமைச்சர் பெருமக்களிடமும் தொடர்ந்து ஆலோசித்தார்.

ஊரடங்கு உத்தரவின் தொடக்க காலகட்டத்திலேயே… அண்ணன் புரட்சித்தமிழர் முதலமைச்சர் எடப்பாடியார் மக்களின் பசியை பற்றித்தான் கவலைப்பட்டார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா வழி வந்தவராயிற்றே… அதனால் அண்ணன் எடப்பாடியார் முதலில் கவலைப்பட்டது ஊரடங்கு காலத்தில் ஏழைகள் உணவுக்கு என்ன செய்வார்கள் என்பது பற்றித்தான்.

முதலமைச்சராக கோட்டையில் ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருந்த எடப்பாடியார் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி… சக அமைச்சர்கள்- அதிகாரிகளுடன் பட்டினப்பாக்கம், காமராஜர் சாலை ஆகியவற்றிலே அமைந்திருக்கிற அம்மா உணவகங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

ஏனென்றால் சென்னையில் அப்போது பெரிய பெரிய ஹோட்டல்கள் முதல் சின்ன சின்ன டிபன் கடைகள் வரை எதுவும் கிடையாது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் யாரும் கடைகளில் அமர்ந்து சாப்பிட முடியாது.

குறிப்பிட்ட மணி நேரம் மட்டும் கடைகளில் பார்சல் மூலமாக விற்பனைக்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதுவும் அதிகபட்ச தேவைக்கு குறைந்தபட்ச தீர்வாகவே இருந்தது.

இந்த நிலையில் தான், ஊரடங்கு உத்தரவு அமலான ஒரு வார காலகட்டத்திலேயே அண்ணன் எடப்பாடியார், அம்மா உணவகங்களின் தேவை அப்போது அதிகரிப்பதை உணர்ந்தார். அதனால், அம்மா உணவகங்கள் மீது தனது சிறப்பு பார்வையை பதித்தார்.
அதன் ஆரம்பமாகத்தான் சென்னையில் உடனடியாக அம்மா உணவகங்களுக்கு சென்று பார்வையிட்டார்.
ஊரடங்கு காலத்தில் மக்கள் அம்மா உணவகங்களை தேடி வருவது அதிகமாகி கொண்டே இருந்தது.
இந்த நிலையில் அம்மா உணவகங்களின் தரத்தையும் அவற்றின் உற்பத்தி திறனையும் அதிகரிக்கும் நோக்கில் தான் அன்றைய முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அம்மா உணவகங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

பட்டினப்பாக்கம் அம்மா உணவகத்திற்கு சென்று சூடாக இட்லி சாப்பிட்ட முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார், அங்கே உணவு சாப்பிட வந்திருந்த மக்களிடமும் உரையாடினார்.
அப்போது முதல்வரிடம், “ஊரடங்கு உத்தரவால எல்லா ஹோட்டலும் மூடிட்டாங்க ஐயா. பார்சல் கொடுக்கிற தனியார் ஹோட்டல்களையும் அதிக விலைக்கு விற்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுலயும் குறிப்பிட்ட நேரத்தை தவிர மத்த நேரங்கள்ல கிடைக்கிறது இல்லை. சீக்கிரம் வித்து தீந்துருது.
அதனால அம்மா உணவகம் தான் இப்ப எங்களுக்கு ஒரே புகலிடம்” என்று பல்வேறு தரப்பை சேர்ந்த மக்களும் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியாரிடம் தங்களது நிலைமையை எடுத்து கூறினார்கள்.

உடனடியாக அமைச்சர் அண்ணன் எடப்பாடியார், அம்மா உணவகம் தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் விசாரித்தார்.
ஊரடங்கு அல்லாத காலகட்டங்களில் ஒரு நாளைக்கு சென்னையில் மட்டும் நான்கரை லட்சம் மக்கள் அம்மா உணவகத்தால் பயன்பெற்று வந்தார்கள். ஊரடங்கு காலத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார்…
“ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகத்தை தேடி எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் உணவு வழங்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான அளவுக்கு உணவு தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும்”  என்று அறிவித்தார்.

அதேபோல அம்மா உணவகங்களுக்கு ஊரடங்கு காலத்தில் பல லட்சக்கணக்கில் மக்கள் வந்து உணவு கேட்ட போதும்… மக்களின் தேவைக்கேற்ப உணவு தயாரிப்பும் அதிகரிக்கப்பட்டது.

ஊரடங்கு நடவடிக்கைகளின் ஆரம்ப காலகட்டத்தில் இப்படி என்றால்… அடுத்தடுத்த மாதங்களுக்கும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது.

ஆரம்பத்தில் கையில் கொஞ்சம் காசு வைத்திருந்த மக்கள் அம்மா உணவகங்களில் மலிவு விலையில் உணவு சாப்பிடுவதற்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் போகப் போக எந்த வேலையும் இல்லை வருமானமும் இல்லை என்ற சூழ்நிலையில் அம்மா உணவகங்களில் கூட மலிவு விலை கொடுத்து உணவு வாங்க முடியாத அளவுக்கு அடித்தட்டு மக்களும் வேலை இழந்த தொழிலாளர் பெருமக்களும் கடுமையான கஷ்டத்தில் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில்தான் முதலமைச்சர் அண்ணன் புரட்சித்தமிழர் எடப்பாடியார் மீண்டும், தான் எம்ஜிஆரின் அம்மாவின் வாரிசு என்பதை நிரூபித்தார்.
2020 ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்திலேயே அதாவது ஏப்ரல் 23 ஆம் தேதியே, முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் இந்த முக்கியமான முடிவை அறிவித்தார்.
அதாவது ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் திரும்ப பெறப்படும் வரை, தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கை மீண்டும் ஏற்படுகிற வரை அம்மா உணவகங்களில் சாப்பிட வரும் அனைவருக்கும் உணவு இலவசமாகவே வழங்கப்படும் என்பதுதான் அன்றைய முதலமைச்சரான, எளிய மக்களின் நிலைமையைப் புரிந்து கொண்ட மிகப் பெரிய இதயத்துக்கு சொந்தக்காரரான அண்ணன் எடப்பாடியார் அவர்களின் உத்தரவு.

2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து, ஊரடங்கு உத்தரவு முடிகிற வரை சென்னையின் 400 அம்மா உணவகங்கள் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் இருக்கிற அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் சாப்பிட வரும் அனைவருக்கும் உணவு இலவசமாகவே வழங்கப்பட்டது. இது  எடப்பாடியார் அவர்களின் சரித்திர சாதனை.

அம்மா உணவகங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை தயாரிப்பதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியும் நாடி அதிலும் வெற்றி கண்டார் அண்ணன் எடப்பாடியார்.

ஒட்டுமொத்த உற்பத்தியும் இயக்கமும் நின்று போன நிலையிலும் அரசாங்கத்துக்கு வருவாய் ஆதாரங்கள் குறைந்து போன நிலையிலும் மக்களின் பசி போக்க வேண்டிய கடமை என்னுடையது என்ற அடிப்படையில் அன்றைய முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் ஊரடங்கு காலகட்டத்தில் லட்சக்கணக்கான- கோடிக்கணக்கான மக்களின் பசி அடங்கியது.

ஊரடங்கு காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் உணவுக்கு உத்தரவாதம் கொடுத்த உன்னத தலைவராக இன்றைக்கும் திகழ்கிறார் அண்ணன் எடப்பாடி யார்.

இந்த உலகமே அதுவரை பார்த்திராத ஒட்டுமொத்த ஊரடங்கு காலத்திலும் தமிழ்நாட்டின் பசிப்பிணி போக்கிய தர்மசீலராக என்றைக்கும் நினைவில் நிறுத்தப்படுவார் எடப்பாடியார்.

அடுத்து வந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகங்களின் நிலை மிக மோசமான கட்டத்தை எட்டியது.

இந்த நிலையில் 2026 இல் மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார். அப்போது அம்மா உணவகங்கள் மீண்டும் சூடும் சுவையும் மிக்க அன்னபூரணி ஆலயங்களாக புது வடிவம் பெறும் என்ற நம்பிக்கை இப்போதே தமிழக மக்களிடம் ஏற்பட்டுவிட்டது.
அதனால்தான்…  அம்மா உணவகங்களில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி ஆகியவற்றோடு பால், டீ ஆகிய பானங்களும் இடம்பெற வேண்டும் என்று மக்கள் இப்போதே அண்ணன் எடப்பாடியாரிடம் கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அம்மாவின் வழியில் என்றென்றும் ஈர இதயத்தோடு தமிழ்நாட்டை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்வதற்கு தயாராகிவிட்டார் அண்ணன் எடப்பாடியார்.
அம்மாவின் அடுத்த திட்டம் என்ன… வரும் வாரம் பார்ப்போம்!