மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்கப்படும் இடத்தில் இரண்டரை அடி எம்ஜிஆர் சிலை 1990 ஆம் ஆண்டு இருப்பன் கவுன்சிலரால் வைக்கப்பட்டது.
அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலை நேற்று நள்ளிரவில் சமூக விரோதிகளால் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அதிமுக சார்பாக கண்டனத்தை தெரிவித்தவுடன் கோஷங்களும் எழுப்பினர்.

தொடர்ந்து சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆய்வு மேற்கொண்டு அவனியாபுரம் போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னொரு செய்தியாளர்களை சந்தித்த எம் எல் ஏ ராஜன் செல்லப்பா
மதுரை அவனியாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தியது தொடர்பாக அதிமுக சார்பாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிகமான பள்ளி கல்லூரி இருக்கக்கூடிய அந்த சாலையில் போதுமான பாதுகாப்பு இல்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
மக்கள் அதிகமாக நடமாட்டம் இருக்கும் பகுதியில் இது போன்ற நடக்கிறது என்றால் பாதுகாப்பு குறைபாடு உள்ளது எனவே பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
சிலை சேதப்படுத்தியது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது அவரும் கண்டனத்தை தெரிவிக்க உள்ளார்.
எந்த சிலையாக இருந்தாலும் சேதப்படுத்துவது என்பது தவறு. எனவே சிலையை சேதப்படுத்திவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அதிமுக சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என MLA ராஜன்செல்லப்பா கூறினார்.