மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் பல மாதங்களாக சேரும் சகதியுமாக உள்ள சாலையை சரி செய்ய பொதுமக்கள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த பகுதியில் ஊத்துக்குளி பேருந்து நிலையம் அரசு பள்ளி முன்பு உள்ள சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் பல மாதங்களாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி வாகனங்கள் பொதுமக்கள் செல்ல முடியாத அளவில் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தீவிர மழை காலம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.