• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடியிடம் சான்றிதழ் பெற்ற குல்ஃபியா

தேசிய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற குமரியை சேர்ந்த இளம்பெண் பிரதமர்
மோடியிடம் இருந்து சான்றிதழ் பெற்றார்.

கன்னியாகுமரி மாணவி குல்ஃபியா தேசிய அளவில் முதலிடம் – ஆல் இந்தியா டாப்பர் ரேங்க். கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயத்தைச் சேர்ந்த அப்துல் காதர் – செய்ய தலி தம்பதியினரின் மகளும், மஹ்பூப் ஹுஸைன் அவர்களின் மனைவியுமான குல்ஃபியா அவர்கள்,

  • நாகர்கோவில் SMRV கல்லூரியில் கம்பியூட்டர் புரோகிராமர் அஸிஸ்டண்ட் படித்து வருகிறார்.
  • நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் கலந்து கொண்ட அவர், அனைவரையும் முந்தி முதல் இடம் (All India Topper Rank) பெற்றவர்.
  • பிரதமர் மோடியிடம் இருந்து சான்றிதழ் பெற்றார்.
  • குல்ஃபியாவின் இந்த சாதனை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.