மிலாதுவிழாவை முன்னிட்டு காரைக்கால் சேமியான்குளம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த இலாஹி பள்ளிவாசல் சார்பில் மீலாதுவிழா ஊர்வம் நடைபற்றது. மஸ்தான் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்ட பேரணி காஜியார் வீதி, முஸ்தபா கமால் வீதி, நூல் கடைவீதி, வழியாக இலாஹி பள்ளிவாசல் சென்றடைந்தது.

இவ்ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் ஜமாத்தார்கள் பங்குபெற்றனர். முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்ற மாணவ மாணவியர்களுக்கு மத பாகுபாடின்றி பொதுமக்கள் தங்கலால் இயன்ற பிஸ்கட் மற்றும் மிட்டாய்களை வழங்கி சிறுவர்களுக்கு சிறப்பித்தனர்.
இவ்விழா ஏற்பாடுகளை ஹஜ்ஜி முகமது தலைமையில் இலாஹி பள்ளிவாசல் நிர்வாக பொருப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கடந்த ஆறு ஆண்டுகளாக கலிபா சாகிப் நினைவாக மதிய விருந்து உபசரிப்பை சையது யூசுப் சாகிப் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.