சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய முன்னேற்ற கழகத்தினர் மாநில பொதுச் செயலாளர் கா பாலசுப்பிரமணியம் தலைமையில் விவசாயிகள் கைகளுக்கு விலங்கிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் சட்ட விதிகளுக்கு புறம்பாக அரசாணை எண் 75 வெளியிட்டது ரத்து செய்ய வலியுறுத்தியும் இதுவரை 130 கட்ட போராட்டங்கள் நடத்திய ரத்து செய்யாததால் இன்று 131 வது கட்ட போராட்டமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இதில் நீர்நிலைகள் கரடு குன்று பகுதிகள் போன்றவற்றை மறைத்து அரசாணை வெளியிட்டு அப்பாவி விவசாயிகளின் 485 ஏக்கர் நிலங்களை எடுப்பதற்கு சிப்காட் நிறுவனம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் சென்ற வாரம் ஒரு தினசரி நாளிதழில் திராவிட முன்னேற்ற கழகம் நாமக்கல் கிழக்கு மாவட்ட சார்பாக விளம்பரம் வெளியிடப்பட்டது.

அதில் விவசாயிகள் பாதிக்காத வகையில் சிப்காட் அமைக்கப்படும் என்றும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பாக இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் இத்திட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் ஆனால் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து மறைத்து வருகிறார்கள்.
எனவே இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செய்தியின் வாயிலாக தமிழக முதல்வர் அவர்கள் அப்பாவி விவசாயிகள் பாதிக்கப்படுவதை தெரிந்து கொள்ள வேண்டும் அது மட்டும் இல்லாமல் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் ஒரு சென்ட் நிலத்தை கூட எடுக்க மாட்டோம் என்று ஏற்கனவே தேர்தல் அறிக்கையின் படி உடனடியாக சிப்காட் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் அப்பாவி விவசாயிகளின் 485 ஏக்கர் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஏக்கர் விவசாயிகளின் முப்போகும் விளையும் விவசாய நிலங்களை தரிசு என்று தற்காலிக பரிசு என்று ஆவணத்தை மாற்றிய அதிகாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதேபோல மத்திய அரசு உடனடியாக கண்காணிக்க வலியுறுத்தி மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதை இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இதில் விவசாய சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.