சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சுரக்குடி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை அப்பகுதி பாஜகவினர் தூய்மை செய்து மரக்கன்றுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பகுதி மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். அப்போது தூய்மை பணியாளர்களுக்கு காதர் துண்டுகள் அணிவித்து கௌரவப்படுத்தினார். நிகழ்ச்சியில் சுய தொழில் செய்யும் பெண்களும் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து சுதேசி உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாநில செயலாளர் அமுதா ராணி மற்றும் நிகழ்ச்சி பொறுப்பாளர் சுரேஷ் கண்ணா ஆகியோர் செய்து இருந்தனர்.இதில் ஏராளமான திருநள்ளாறு தொகுதி பாஜகவினர் கலந்து கொண்டனர்.