சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ரஞ்சனா பாலசுப்ரமணியம் தம்பதியர் கடந்த 30 வருடமாக நவராத்திரியில் அம்மன் கோயில்களின் தர வரலாற்றை சேகரித்து ஒவ்வொரு வருடமும் சுமார் 10 அம்மன் கோயில் வரலாற்றை புத்தகமாக வடிவமைத்து,

அந்த கதைக்கேற்ப கொலு பொம்மைகளை வாங்கி வைத்து வரும் பார்வையாளர்களுக்கு அந்தக் கதைகளை சொல்லி,
அவர்களுக்கு அந்த தம்பதியினர் எழுதிய புத்தகத்தையும் பரிசாகவும் வழங்கி வருகின்றனர்.

இந்த பிரம்மாண்டமான கொலுவை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.