• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா.

BySeenu

Oct 2, 2025

கோவையில் டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்உள்ளது. ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்திபோடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர். பூமார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்தக் கத்தி போடும் திருவிழா ஊர்வலம் துவங்கி டவுன்ஹால் உள்ள சவுடேஸ்வரி.

கோவில் வந்து அடையும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர். இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர்.

இந்தப் திருமஞ்சன பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம்சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பின்னர் அந்த ஊர்வலம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் முடிவு அடையும் . பின்னர் அம்மனுக்கு விசேஷ பூஜை நடத்த பட்டு தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.