இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில்களில் நடைபெற உள்ள பூக்குழி மற்றும் தேரோட்டத்திற்கான கொடியேற்றம் வியாழக்கிழமை அதிகாலை துவங்கியது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரின் மையப்பகுதியில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியபட்ட மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான கொடியேற்றம் அதிகலை மூன்று மணி அளவில் நடைபெற்றது.

கொடியேற்றத்தை தொடர்ந்து இன்று முதல் வரும் 13–ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மூஷிக வாகனம், அன்னபட்சி வாகனம், குடை சப்பரம், புஷ்ப விமானம், தண்டியல் சப்பரம், தட்டிச்சப்பரம் திருத்தேர் உள்ளிட்ட வாகனங்கள் மாரியம்மன், வீதி உலா மற்றும் திருவாசக வேள்வி, அக்கினிச்சட்டி, முளைப்பாரி உலா உள்ளிட்ட ஆன்மீக நிகழ்ச்சிகளும், வீர விளையாட்டுகள் மற்றும் வான வேடிக்கைகளுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் விழா ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின் நாட்டாண்மைகள் கனி, மணி, பெரியசாமி ,சமுத்திரம்.காளியப்பன் ஆகியோர் செய்திருத்தனர்.

பக்தர்களுக்கு அன்னதான ஏற்பாடுகளை அதிமுக ஒன்றிய செயலாளர் நவரத்தினம் மற்றும் சிதம்பரம் ஆகியோர் செய்து இருந்தனர்.