விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்திற்கு உட்பட்ட எல்லையான வன பாதுகாப்பு காடுகள் மேய்ச்சல் தரையில் அருகில் காப்பு காடுகள் என்று அழைக்கப்படும் ஒற்றை மரங்களை சில சமூக விரோதிகள் இரவோடு இரவாகவும் இப்பொழுது பகலிலும் ட்ரில்லர் மெஷினை வைத்து வேரோடு அறுத்து பல மில்லுகளிலும் தொழிற்சாலைகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

இதை பலமுறை வனகாவலர்களிடமும் வனத்துறையினர் உட்பட்ட வன அலுவலர்களிடம் பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் வன காப்புக் காடுகளை அழித்து வரும் சமூக விரோதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து காப்புக்காடுகளை பாதுகாக்க வேண்டும் என்று நதிக்குடி ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
