ஸ்ரீ ஸ்வஸ்திக் தொழில் சார்ந்த திறன் மேம்பாடு நிறுவனம் கீழ் செயல்படும் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமியின் சிறுவர் – சிறுமியர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் பரணிபுத்தூரில் இன்று நடைபெற்றது.

இது குறித்து பேசிய திருமதி யுவராணி அவர்கள், நிறுவனர் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமி பேசுகையில்,
“குன்றத்தூரில் அமைந்துள்ள திருமதி ராஜேஸ்வரி அவர்களின் வாவ் கிட்ஸ் பாலர் பள்ளியில் (Preschool) மண் பானை வண்ணம் அடித்தல், ஓவியம் வரைதல், ஓரிகாமி (Origami) காகிதத்தை மடித்து வளைத்து விலங்குகள், பூக்கள், கற்பனை உருவங்கள் போன்ற பல்வேறு வடிவங்களைச் செய்யும் ஜப்பானியக் கலை, உட்பட பல்வேறு செயல்திறன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
“இந்நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றத்தினால் எங்களுக்கு மிகவும் மன நிறைவு அளித்தது என்றும், யுவராணி அவர்கள் கூறினார்.