நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் குமாரபாளையம் அமானி கிராம நிர்வாக அலுவலராக தற்போது பணிபுரிந்து வரும் தியாகராஜன் மீது சொத்து குவிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்கபத்து ரூபாய் இயக்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சீனிவாசன்

அவர்கள் அளித்த புகார் மீது முன்பு இருந்த திருச்செங்கோடு கோட்டாட்சியர் அவர்கள் பெயரளவிற்கு விசாரணை செய்தார். அதன் பின்பு புதிதாக பொறுப்பேற்றுள்ள கோட்டாட்சியர் அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில துணை பொது செயலாளர் சீனிவாசன் அவர்கள் மீண்டும் முந்தைய மனு மீது விரைவாக நடவடிக்கை

எடுக்கவேண்டி 29/09/2025 அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். உறுதியளித்ததன் பேரில் நடவடிக்கை எடுப்பாரா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள்