பாபநாசம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையிலும் செயல் அலுவலர் குமரேசன் , பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாபநாசம் பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு மானியதிட்ட பணிகள்,
நமக்கு நாமே திட்ட பணிகள், மேற்கொள்வது எனவும் பழுதடைந்த தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலைகளில் உள்ள பள்ளங்கள் சிறிய அளவிலான சேதமடைந்த சாலைகளை பழுதுப் பார்ப்பது எனவும், 2025-2026 ஆம் ஆண்டு பள்ளி மேம்பாட்டு மான்யம்-6 வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்திடுவது எனவும், பாபநாசம் பேரூராட்சி அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.14.82 கோடி மதிப்பீட்டில் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குவது எனவும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி உதயகுமார், முத்து மேரி மைக்கேல்ராஜ், ஜாபர் அலி, புஷ்பா சக்திவேல்,கீர்த்தி வாசன், சமீரா பர்வீன்,பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன்,பிரகாஷ், விஜயா,கெஜலட்சுமி செல்வ முத்துக்குமரன், கோட்டையம்மாள் சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாபநாசம் பேரூராட்சியில் பணியாற்றக்கூடிய, 80 தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடைகள் வழங்கப்பட்டது.