விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தலைமையில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என பச்சையாபுரம் ,கோட்டையூர், மேலத்தாயில்பட்டி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது மேலத்தாயில்பட்டியை சேர்ந்த ராகவன் (வயது 56) என்பவரது பெட்டிக்கடையில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதற்கு வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக விற்பனைக்கு வைத்திருந்த 26 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விஜயராகவனை போலீசார் கைது செய்தனர்.