விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரின் சாக்கு பையை சோதனையிட்ட போது சட்ட விரோதமாக தயார் செய்யப்பட்ட முப்பது கிலோ சோல்சா வெடிகள் இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக பட்டாசுகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சத்யராஜ் (வயது 40) என தெரிந்தது .உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.







; ?>)
; ?>)
; ?>)