விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம்,சிறப்பு பூஜை, நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் பராசக்தி மாதர் சங்கம் சார்பில் கொலு வழிபாடு நடைபெற்றது. அதேபோல் துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், மடத்துப்பட்டி மாரியம்மன் கோவில், இறவார்பட்டி செல்லியம்மன் கோவில், கீழச்செல்லையாபுரம் செல்லியம்மன் கோவில், சுந்தாளம்மன் கோவில், உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
