• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவது நகர்ப்புறத்து பெண்கள்..,

BySeenu

Sep 30, 2025

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மாதம் முழுவதும் பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனைகள் வழங்கப்பட உள்ளனர்.இந்நிகழ்ச்சியில் P&S குடும்பங்கள் தலைமை நிர்வாக அதிகாரி பிரியங்கா கார்த்திகேயனி மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ஆகியோர் புற்றுநோய் விழிப்புணர் குறித்து வீடியோ பதிப்பை அறிமுகம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய புற்றுநோய் மருத்துவர் குகன்:-

2018-ம் ஆண்டு இந்தியாவில் 1 லட்சத்து 68 ஆயிரம் மார்பக புற்றுநோய் இருந்து வந்த நிலையில் தற்போது 2 லட்சத்து 22 ஆயிரம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதில் பெண்கள் இந்தியாவில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

இந்தியாவில் 3-ம் மற்றும் 4-ம் கட்டத்தில் புற்றுநோய் கண்டறிவதனால் அதனை 50% முதல் 60% வரை குணப்படுத்த முடியும் என்றும் 1-ம் அல்லது 2-ம் கட்டத்தில் கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தலாம் என புற்றுநோய் மருத்துவர் தெரிவித்தார்.

நகர்ப்புறத்தில் வசிக்கும் பெண்கள் தான் அதிக அளவில் புற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும் 30 வயதுக்கு மேல் திருமணம் மற்றும் குழந்தை பெறுவது மூலமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் எனவும் சிறுவயதிலே வயதுக்கு வருதல்,மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டாலும் பெண்கள் எளிதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவார் என பெண்களுக்கு புற்றுநோய் நிபுணர் குகன் எச்சரித்துள்ளார்.