தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் ஊராட்சி பகுதியில் 10000.க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக அம்மாபட்டி தெருவில் 50.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் தனிநபர்கள் சிலர் தங்களது வீட்டின் முன்பாக பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து அதில் பத்தடி நீளம் கம்பி வேலி அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளனர்.
மேலும் கழிவுநீர் சாக்கடையை முடியும், கழிவு நீர் செல்ல முடியாத வகையில் தடைகளையும் ஏற்படுத்தி உள்ளனர்.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பொது பாதையை பயன்படுத்த முடியாமலும் கழிவுநீர் செல்லாமல் கழிவு நீர் தேங்கி இருப்பதால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..
மேலும் அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் தீயணைப்பு வாகனமோ, அவசர ஊர்தி உள்ளிட்ட எந்த ஒரு வாகனமும் அச்சாலை வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் இதுகுறித்து மேல்மங்கலம் ஊராட்சி அலுவலகம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைவரிடமும் அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
மேலும் அந்த புகாரிணைத் தொடர்ந்து பெரியகுளம் சார் ஆட்சியாளர் ரஜத் பீடன் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதை உடனடியாக அகற்றிட ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டாட்சியரிடமும் உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த ஆறு மாத காலமாக ஊராட்சி நிர்வாகம் சார் ஆட்சியர் உத்தரவை மதிக்காமல் ஆக்கிரிப்பை அகற்றாமல் கால தாமதம் செய்து வந்ததால் இன்று அப்பகுதி பொதுமக்கள் பொதுபாதை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சுமார் 2 .1/2 மணி நேரத்துக்கும் மேலாக ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராடி வரும் பொது மக்களிடம் ஊராட்சி நிர்வாகமோ, காவல்துறையோ எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் வராமல் உள்ளதால் தொடர்ந்து அலுவலகத்தில் முன் அமர்ந்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.