விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சோனி கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் முதியவர் ஒருவர் தவறி விழுந்ததாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிவகாசி தீயணைப்பு நிலை அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கல்குவாரி தண்ணீருக்குள் இறங்கி அரை மணி நேரம் கழித்து முதியோர் உடலை மேலே கொண்டுவந்தனர்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தியதில் கீழத்திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 60) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து திருத்தங்கல் போலீசார் சுப்பிரமணி உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. தொடர்ந்து போலீசார் சுப்பிரமணி தடுமாறி குவாரியில் விழுந்தாரா அல்லது யாராவது கொலை செய்து உடலை குவாரியில் போட்டார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.