கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் மத்திய இணை அமைச்சர் எம் முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

நேற்று முன்தினம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்ப ட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மத்திய இணை அமைச்சர் L..முருகன் ஆகியோர் இன்று கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு வருகை புரிந்தனர்.

அவர்களுடன் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். கரூர் மாவட்ட அதிகாரிகள் மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மத்திய இணை அமைச்சர் L.முருகன் ஆகியோரிடம் சம்பவம் குறித்து விளக்கி கூறினர்.