• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் மாநகராட்சி அரங்கில் மரணம் அடைந்தோருக்கு அஞ்சலி..,

நாகர்கோவிலில் மாநகராட்சியின்,மாமன்ற கூட்ட அரங்கில் 29.09.2025 திங்கள்கிழமை அன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப., துணை மேயர் திருமதி. மேரி பிரின்ஸி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடக்கத்தில் கரூரில் நடந்த துயர சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் நடந்த நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாமன்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் சரவணன் உதவி ஆணையாளர் பாலசுந்தரம் , மாநகர் நல அலுவலர் மருத்துவர் ஆல்பர் மதியரசு,உதவி செயற்பொறியாளர் ரகுராமன் மண்டல தலைவர்கள் ஜவகர், திருமதி.அகஸ்டினா கோகிலவாணி,முத்துராமன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.