கரூரில் நேற்று அகால மரணம் அடைந்த குழந்தைகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 40 பேர் ஆத்மா சாந்தியடைய மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், சோழவந்தான் தொழிலதிபர் ஆனந்தன் உட்பட பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.தமிழக மற்றும் மத்திய அரசு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இது மாதிரி சம்பவம் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நிகழ்வில் கோரிக்கை வைக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.