தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக 22 ஆம் ஆண்டு ஆடிபுர கஞ்சி கலய விழா நடைபெற்றது

விழாவை ஜெயராமன் தலைமையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் தஞ்சை மத்திய பகுதி துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் வாசன் கொடியேற்றி வைத்தார்.
அதற்கு முன்னதாக திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கஞ்சி கலயம் முக்கிய வீதி வழியாக பக்தர்கள் எடுத்து வந்து வழிபாட்டு மன்றத்தில் வைத்து வழிபட்டனர்.மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.