விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜ் நகர் பகுதியில் அதிகாலை 5 மணி அளவில் இராஜபாளையத்தில் செங்கல் இறக்கி விட்டு சொக்கநாதன் புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி காமராஜ் நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது சாலை ஓரமாக மாட்டுக்கறி கடை மற்றும் வீட்டுக்குள் டிப்பர் லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்து வீட்டுக்குள் புகுந்தது இதில் வீட்டில் கட்டிலில் அமர்ந்திருந்த சேத்தூர் காமராஜ் நகரை சேர்ந்த பொன்னையா மகன் பொன்னையா வயது 70,. சுந்தரராஜபுரம் இந்திரா நகரை சேர்ந்த ஆகாஷ் வயது 16 ஆகிய இருவர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுந்தர்ராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த மணிச்சாமி. மகன் மணிமாறன் வயது 26 என்பவர் படுகாயம் அடைந்தார் .

இந்த தகவல் அறிந்து வந்த தளவாய்புரம் போலீசார் பலியானவர்கள் உடலை இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மணிமாறன் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்த ஏற்படுத்தி சொக்கநாதன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வைரசாமி மகன் தலைமலை வயது 38 என்பவரை கைது செய்து தளவாய்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
