கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்பு 10,000 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடந்தது. படிப்படியாக நிலங்கள் வீடுகளாக மாறியதால், தற்போது அது 6,500 ஹெக்டேராக குறைந்துள்ளது.
இங்கு கன்னிப்பூ, கும்ப பூ என்ற இரு பருவங்களாக நெல் பயிரிடப்படுகிறது.

தற்போது கன்னிப்பூ பருவ நெல் அறுவடை செய்யப்படும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் பறக்கை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் சாய்ந்து, மணிகள் ஈரமாகி தரம் குறையும் அபாயம் உள்ளது.
விவாசாயத்தின் அவசியம் மழை என்றாலும். விளைந்த நெற்பயிற்களை அறுவடை செய்ய வேண்டிய காலத்தில் பருவம் தப்பி வந்த மழையால் விவசாயிகள்
வேதனை.
இதனால் விலையிழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.