தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று செப்டம்பர் 27 ஆம் தேதி மாலை கரூரில் வேலுச்சாமிபுரம் என்ற பகுதியில் பரப்புரை பயணம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மிகக் கடுமையான கூட்டம் திரண்ட நிலையில், விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே தொண்டர்கள் மயக்கம் அடைந்தனர். இடையில் பேச்சை நிறுத்திவிட்டு வேனில் இருந்து வாட்டர் பாட்டில்களை தொண்டர்களை நோக்கி வீசினார் விஜய். ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களை அனுப்பி வைத்தார்.
அவர் பேசி முடிந்த நிலையில் ஆதார் அர்ஜுனா அவர் காதில் ஏதோ சொல்ல, ஒரு குழந்தை காணாமல் போய்விட்டதாக சொல்கிறார்கள் கண்டுபிடித்து கொடுங்க என்று ஒரு அறிவிப்பு கொடுத்தார் விஜய்.
இந்த நிலையில் விஜய் பரப்புரை பயணம் முடித்ததும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர்.
அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அதில் 10 பேர் உயிரிழந்ததாகவும், இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 20க்கும் மேலே எனவும் அதிர்ச்சித் தகவல்கள் வந்துள்ளன.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து விரைந்து தீவிர சிகைச்சை அளிக்க உத்தரவு விட்டார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு, அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரை உடனடியாக நேரில் சென்று பாதிப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக பணிகளையும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் போர்கால அடிப்படியில் செய்து தரும்படி உத்தரவுவிட்டுள்ளார். கரூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.
மேலும் ஏடிஜிபியிடம் பேசிய முதலமைச்சர் அவர்கள் சுமுகமான சூழ்நிலை கொண்டுவர கண்காணிப்பில் வைத்துக் கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்.