அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமிதலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா முன்னிலையில் துவக்கி வைத்தார்.புதிய தடுப்பணை கட்டும் பணிகளை துவக்கி வைத்து போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி . சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி விவசாயிகளுக்கு நீர்தேக்கி தரவேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது புதிய தடுப்பணை கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகின்ற போது மாவட்ட மக்களும், மாவட்ட அமைச்சர் நான் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார். அதற்கு பிறகு இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ரூபாய் 24 கோடியே 36 இலட்சம் அளவில் தடுப்பணை கட்டுவதற்கு நிர்வாக அனுமதி தரப்பட்டது. அதற்கான அரசாணை 11.04.2025 அன்று வெளியிடப்பட்டது. புதிய தடுப்பணை கட்டுவதற்கு பணிகள் இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகின்ற மருதையாறு அரியலூர் மாவட்டம் வழியாக செல்கிறது. கிட்டதட்ட பச்சமலையில் உற்பத்தியாகி இங்கு வருகின்ற போது இடையே சில காட்டாறுகளும் சேர்ந்து பெரும் அளவில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகின்ற தண்ணீரை தேக்குவதன் மூலம் சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற சுமார் 400 ஏக்கர் நிலபரப்பு நீர் வசதி பெற இயலும். இத்தடுப்பணை இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் உறுதுணையாக இருக்கும். இப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இத்திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு அறிவித்த திட்டம் ஏப்ரல் 2025 மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
ஒரு அரசு திட்டத்தினை அறிவிக்கும் போது அதனை நிiவேற்ற அரசு நடைமுறைகள் இருக்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு திட்டத்தினை அறிவித்தப் பிறகு அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான காலகட்டம் இருக்கிறது. அதன்பிறகு இதற்கான அரசாணை வெளியிடப்படும். அரசாணை வெளியிடப்பட்ட பிறகு அந்த துறை மூலமாக டெண்டர் கோரப்படும். டெண்டர் கோரியதில் குறைவான தொகையில் விண்ணப்பித்தவர்களை அழைத்து ஒப்பந்தம் வழங்கப்பட்டு அந்த பணி துவங்கப்படும். இது ஒரு அரசினுடைய நடைமுறை.மேலும், பெரிய அளவிலான பேருந்துகள் இயக்கப்பட முடியாத இடங்களில் மாற்று வழிமுறைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாக அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் . எடப்பாடியை வெல்லம் வியாபாரி என்று நாங்கள் அப்படிச் சொல்லக் கூடாது என்றுதான் இருந்தோம்.

வெல்லம் வியாபாரம் செய்பவர்கள்கூட மரியாதையாக எல்லாரிடத்திலும் பேசித்தான், வியாபாரம் செய்வார்கள். ஆனால், இவர் அதைக் கூடச் செய்யாமல் வந்திருப்பார் என்பதுதான் தெரிகிறது. யாரையும் மதிக்கின்ற போக்கு இல்லாமல், மிகத் துச்சமாக ஒருமையில் பேசுவது என்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நாம் பார்த்திராத மிகத் தாழ்வான நிலையாகும். அந்த நிலைக்கு வந்திருக்கின்ற எடப்பாடியை மக்கள் நிச்சயமாக மன்னிக்க மாட்டார்கள் .அவருடைய தரம் அவ்வளவுதான்.
என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.