நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடக்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைப்பெற்றது.

குளங்கரையில் இருந்து பூங்கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். அப்போது மங்கையர்க்கரசி என்ற பெண் பக்தர் தீ குண்டத்தில் இறங்க பயந்து தயங்கி நின்றபோது அப்போது அருகில் இருந்த சீனிவாசன் என்ற பெரியவர் அந்த பெண்ணை தீ குண்டத்தில் இறங்க தூக்கி சென்ற போது தடுமாறி தீகுண்டத்தில் இருவரும் விழுந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த பரபரப்பு வீடியோ காட்சிகள் அருகில் நின்றவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது