கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த கோட்டைபாளையம் பகுதியில் இயங்கிவரும் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியது.
தாய், தந்தையற்ற சுமார் 26 ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்படும் அந்தக் காப்பகத்தில், சிறுவனை அங்கு இருந்த காப்பக மேலாளர் செல்வராஜ் கொடூரமாக பெல்டால் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

உடனடியாக தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சம்பவத்திற்கு பொறுப்பான செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.
இந்தச் சம்பவம், குழந்தைகள் காப்பகங்களில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிப்படுத்துவதாகவும், ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக அரசு மற்றும் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.