மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் அருகிலும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை வாயிலிலும் அன்புக்கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் கே.எஸ் ஆம்புலன்ஸ் கருணாநிதி அவரது சொந்த செலவில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அவருடன் அறக்கட்டளையின் செயலாளர் கனிவளவன்,வழக்கறிஞர் பெர்னாட்ஷா ஆம்புலன்ஸ் மாதவன்,அன்புச்செல்வன், பன்னீர்வேலி கருணாநிதி,திமுக ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சிவராஜன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.