உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், கூடுதல் பணி சுமை ஏற்படும் நிலையில் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று அரசு வருவாய் துறை ஊழியர்களுக்கு நெருக்கடி வழங்குவதாகவும், பெறப்படும் மனுக்களை இரவோடு இரவாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் செய்யப்படுவதால் பெண் ஊழியர்கள் அலுவலகத்தில் தங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்தத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்திட வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களாக அரசிடம் முறையிட்டும் பலன் இல்லாத நிலையில், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை புறக்கணிப்பதாக வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று பணிகளை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகம் வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தென்னரசு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்











; ?>)
; ?>)
; ?>)