• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சிபிசிஐடி உண்மையை வெளி கொண்டுவர வேண்டும்..,

ByKalamegam Viswanathan

Sep 24, 2025

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் சரவண மருது. சினிமாவில் துணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தவர். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வீட்டிலிருந்து புறப்பட்ட சரவணமருது இரண்டு நாட்களாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவரது சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது ஒத்தக்கடை பகுதியில் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்தப் பகுதியில் விசாரணை நடத்தியதில் சந்தேகத்திற்குரிய நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முன்விரோதம் காரணமாக சரவணன் மருதுவை அவர்கள் கொலை செய்து வைத்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந் நிலையில் காவல்துறையினர் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தற்போது சரவணன் மருதுவிற்கு 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த குறும்படத்திற்கு ஒளி பதிவு செய்ததற்கான தேசிய விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது.

நேற்று டெல்லியில் குடியரசுதலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் சரவண மருதவின் தாயார் முத்துலட்சுமிக்கு ஜனாதிபதி கையில் தேசிய விருதை பெற்றார்.

தொடர்ந்து இன்று காலை டெல்லியில் இருந்து மதுரை வந்த சரவணன் மருதுவின் தாயார் மற்றும் சகோதரி மருதவள்ளி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்:

சரவண மருது பிறவியிலேயே பன்முக திறமை கொண்டவர். எளிமையான குடும்பம் எங்கள் தந்தை அரசு பேருந்தில் நடத்துனராக பணி புரிந்தார்.

அவருடன் பிறந்தது ஒரு மூத்த சகோதரி இளைய சகோதரி. தந்தை இறந்த ஒரு வருடத்திலேயே சரவண மருது கொலை செய்யப்பட்டதால் தற்போது அவரது தாயார் தனிமையில் உள்ளதுடன் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்தில் உள்ளார்.

சரவண மருதுக்கு கிடைத்த இந்த தேசிய விருதை எங்கள் குடும்பத்தின் சார்பாக நமது தேசத்திற்கும் தேசத்தில் உள்ள கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்.

ஆனால் இந்த தேசிய விருது எங்களுக்கு முழுமையான சந்தோஷத்தை அளிக்கவில்லை ஏனென்றால் சரவண மருதுவின் கொலை காண உண்மையான காரணம் முழுமையாக வெளிவர வேண்டும்.

அதற்கு தமிழக அரசு மற்றும் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

அவரது கொலைக்கான உண்மையான காரணம்? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக செய்தார்கள்? என உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலை நிறுத்த வேண்டும். அப்போதுதான் இந்த தேசிய விருதை பெற்றதன் முழு மகிழ்ச்சியும் எங்கள் குடும்பம் அடையும்.

எனவே எங்கள் குடும்பத்தின் சார்பாக தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்திற்கு இந்த கோரிக்கையை வைக்கிறோம். அத்துடன் சேர்த்து பொருளாதாரத்தில் சிரமப்படும் எங்கள் தாய் முத்துலட்சுமிக்கு தமிழக அரசு சார்பாக நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.