மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி பாரம்பரியமிக்க தொகுதியாகும் இந்த தொகுதி வடக்கு பகுதியில் உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் மேற்கு பகுதியில் நிலக்கோட்டை தொகுதி அருகிலும் கிழக்கு பகுதியில் மதுரை கிழக்கு தொகுதி மற்றும் மதுரை மேற்கு தொகுதி திருப்பரங்குன்றம் தொகுதி ஆகியவற்றின் அருகில் மதுரை மாவட்டத்தின் சிறிய தொகுதியாக உள்ளது சுமார் 2 லட்சத்து 19000 மக்கள் தொகை கொண்ட இந்த தொகுதி முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளது குறிப்பாக பெரியார் பாசன கால்வாய் மூலம் அலங்காநல்லூர் பாலமேடு சோழவந்தான் வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் முழுவதும் விவசாயத்தை நம்பியே இந்த பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் சோழவந்தான் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் வாடிப்பட்டி பகுதியில் 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் பாலமேடு அலங்காநல்லூர் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் என சுமார் 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் உயர்நிலைப் மற்றும் மேல்நிலைபள்ளிகள் செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வரும் சூழ்நிலையில் தங்களின் உயர்கல்விக்காக கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்வதற்காக மதுரை உசிலம்பட்டி திருமங்கலம் நிலக்கோட்டை திண்டுக்கல் விருதுநகர் போன்ற அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் பொது மக்களுக்கு எந்த ஒரு அரசும் இதுவரை ஏனோ செவிசாய்க்கவில்லை குறிப்பாக பாரம்பரியமிக்க சோழவந்தான் தொகுதியில் சோழவந்தான் பகுதியிளோ அல்லது வாடிப்பட்டி பகுதியிளோ அரசு இடங்களை கையகப்படுத்தி உடனடியாக அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் முக்கியமாக சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டில் உள்ள அரசன் சண்முகனார் மேல்நிலைப் பள்ளி ஆனது 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது
இந்தப் பள்ளியின் அருகிலேயே விளையாட்டு மைதானமும் மேலும் அருகிலேயே நகரியில் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியும் உள்ளது தமிழகத்தில் உயர் பதவி மற்றும் அரசியலில் உயர் இடத்தில் இருக்கும் பலர் இந்த பள்ளியில் கல்வி பயின்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது ஆகையால் இந்த பள்ளியில் உள்ள இடத்தில் அரசு கலைக் கல்லூரி அமைத்தால் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதி மக்களும் வந்து செல்வதில் சிரமம் இருக்காது எனவும் மேலும் இந்த பள்ளியின் பாரம்பரியமும் பாதுகாக்கப்படும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆகையால் சுமார் 30,000க்கும் மேற்பட்ட உயர்கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகளின் நலன் கருதியும் அவர்களின் பெற்றோர்களின் சிரமங்களை குறைக்கும் வகையிலும் சோழவந்தான் நகர் பகுதியில் அல்லது புறநகர் பகுதியில் உடனடியாக அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் நேற்றும் இன்றும் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஆய்வுப்பணிகள் மற்றும் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இதை கோரிக்கையாகவும் சோழவந்தான் தொகுதி மக்கள் வைக்கின்றனர்.
ஆகையால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு உயர் கல்விக்காக சென்று சிரமப்பட்டு வரும் சோழவந்தான் தொகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்