மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உசிலம்பட்டி வட்டார நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் மறுமலர்ச்சி சங்கம், எழுமலை கிராமிய கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உசிலம்பட்டி, எழுமலை, பேரையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராமிய கலைஞர்கள், மேளதாரர்கள், நாதஸ்வர கலைஞர்கள், கரகாட்ட கலைஞர்கள் என சுமார் நூறுக்கும் மேற்பட்டடோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், 58 வயது நிறைவுற்றோருக்கு உதவித்தொகை, இறந்த கலைஞர்களின் வாரிசு தாரர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரிக்கை வைத்தனர்.
மேலும் இது குறித்து உசிலம்பட்டி உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமாரிடம் மனு அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.