அரியலூர் அண்ணா சிலை அருகே, 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10,000-ஆக உயர்த்தி, ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்க வேண்டும். மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தினை கருத்தில் கொண்டு சிறப்பு காலம் முறை ஊதியம் ரூ.15,000 வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிராம சுகாதார ஊக்குநர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கி பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உட்பட 16 அம்ச கோரிக்கைகளை rவலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் என்.எம்.செந்தில் தலைமை வகித்தார்.கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் ஜி சரவணன், மாவட்டப் பொருளாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் பி.பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் டி. செல்வமணி, சிதம்பரம், தலைமைநிலைய செயலாளர் ஏ. அமிர்தலிங்கம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ப. ராஜேஸ்வரி, மாவட்ட துணைத்தலைவர் க.திருநாவுக்கரசு, துணைச் செயலாளர் ஆர் .சசிகுமார், இணைச் செயலாளர்கள் ஆர் .ரமேஷ், இரவி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் திருமாறன், மாநில பொதுக் குழு உறுப்பினர் மு.ராஜகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.