• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

36 சவரன் நகை திருடிய 2 இளைஞர்கள் கைது..,

ByT. Balasubramaniyam

Sep 23, 2025

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்லித்தோப்பு கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 09.10.2024 அன்று தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு தங்கியுள்ளார்.

இந்நிலையில் 10.10.2024 வீட்டின் கதவு உடைந்து திறந்து இருப்பதாக கிடைத்த தகவலின்படி, ராமலிங்கம் வீடு திரும்பி பார்த்தபோது அவரின் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டடு 36 சவரன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி பொருட்கள், திருடு போனது. இதுகுறித்து ராமலிங்கம் 10.10.2024 அன்று மீன்சுருட்டி காவல் நிலையம் ஆஜராகி அளித்த புகார் அடிப்படையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் இராஜசேகரன் வழக்கு பதிவு செய்தார்.

இந்நிலையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, ஜெயங்கொண்ட உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் இரவிச்சக்கரவர்த்தி வழிகாட்டுதலின்படியும், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர்சீனிபாபு தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் புலன் விசாரணை செய்து குற்றவாளி களை தேடி வந்தனர்

புலன் விசாரணையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணவாளன் 25/25, மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் 19/25,ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளர் சீனிபாபு தலைமையிலான காவல்துறையினர் 23.09.2025 இன்று எதிரிகளை கைது செய்து, எதிரிகளிடமிருந்து திருடு போன 20 சவரன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்கள், மற்றும் எதிரிகள் உபயோகித்த இருசக்கர வாகனம் முதலியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இதில் எதிரி மணவாளன் மீது நாகப்பட்டினம் கடலூர், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 28 வழக்குகளும், எதிரி ஆகாஷ் மீது நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 3 வழக்குகளும் உள்ளன என்பது தெரியவருகிறது

அதனைத் தொடர்ந்து இன்று எதிரிகள் இருவரையும் மீன்சுருட்டி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்வழக்கு குறித்த புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.