நாகப்பட்டினம் அவுரித்திடலில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் 2025 – 26 ஆண்டு ஊதிய உயர்வு கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் ஊதியத்தை 16 சதவீதத்திற்கு மேல் உயர்த்தி வழங்க வேண்டும், EMRI – GHS தனியார் நிர்வாகத்திற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில பொதுச் செயலாளர் இரா.இராஜேந்திரன், மாநில பொருளாளர் சாமிவேல், மாநில துணை பொதுச் செயலாளர் பாஸ்கரன், மாநிலச் செயலாளர் காளிதாஸ், மாவட்டச் செயலாளர் அன்பழகன், மண்டலச் செயலாளர் ஆசைத்தம்பி உள்ளிட்ட நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்