• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சந்தன மரங்களை வெட்டி கடத்தும் மர்மக் கும்பல்..,

BySeenu

Sep 23, 2025

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சந்தன மரங்கள் உள்ளது. மாநகரின் மத்திய பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் முகாம அலுவலகம், மாவட்ட வன அலுவலர் குடியிருப்பு, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம், காவல் துறை ஆணையர், போன்ற அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள சந்தன மரங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம கும்பல் தொடர்ந்து வெட்டி கடத்தி வந்தனர். அதனை தடுக்க காவல் துறையினாலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தினர். இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக சந்தன மரம் வெட்டி கடத்தல் சம்பவங்களும் நடக்கவில்லை,

இந்நிலையில் கோவை காந்திமா நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில், நேற்று இரவு புகுந்த மர்ம கும்பல் அங்கு இருந்த 4 சந்தன மரங்களை கடத்தி உள்ளது. மேலும் பாதியாக வெட்டப்பட்டு மரங்களும் உள்ளது.

இதனை அங்கு இன்று காலை நடை பயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சந்தன மரம் வெட்டி கடத்திய மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.