• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மீனாள் என்னும் மனித நேய மாதரசி…

ByKalamegam Viswanathan

Sep 23, 2025

உதயகுமார் தாயார் பற்றி

உருகும் மக்கள்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தாயாரின் படத்தை செப்டம்பர் 14 ஆம் தேதி திறந்து வைத்தார்

சித்திரைச்சாமி தேவர், தங்கம்மாள் ஆகியோரின் மகளும், ஆர்.போஸ் தேவர் மனைவியும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்,

ஆர்.பி.யோகீஸ்வரன், எம்.மாரீஸ்வரி ஆகியோரின் தாயாரும்,  அம்மா சேரிடபுள் டிரஸ்ட் பொருளாளருமான  பி.மீனாள் அம்மாள் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்,

இதனையொட்டி  கடந்த 3ஆம் தேதி கழக பொதுச் செயளாலர் எடப்பாடியார் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில் செப்டம்பர் 8 ஆம் தேதி மீனாள் அம்மாள் இயற்கை எய்தினார்.

அதிமுகவின் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் உதயகுமார் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரிடம் தொலைபேசியில் ஆறுதல் கூறி இரங்கல் செய்தி வெளியிட்டார்.

 மீனாள் அம்மையாரின் உடல் குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

இதனை தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் தாயார் மீனாள் அம்மாள் அவர்களின் பட திறப்பு அம்மா கோவிலில் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்தார்.  ஆர் பி உதயகுமார் குடும்பத்தினருக்கு  ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட  திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த  மக்களிடம் பேசியபோது, 

”ஆர்பி உதயகுமார் அவர்களின் தாயாரான மீனால் அம்மாள் அம்மா சேரிடபுள் ட்ரஸ்ட் பொருளாளராக இருந்த காலகட்டங்களில் ஏராளமான உதவிகளை சமுதாயத்தின் பல்வேறு தரப்பு மக்களுக்கும் செய்திருக்கிறார்.

கொரோனா பாதிப்பு காலகட்டங்களில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக தினமும் மூன்று வேளை உணவு வழங்கி அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் காப்பாற்றியவர்.

கொரோனாவை கட்டுப்படுத்துகிற இயற்கை மூலிகை நீரான கபஸ்வர குடிநீரை மாநிலம் முழுவதும் வழங்க ஏற்பாடு செய்தவர்.

திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனா காலகட்டங்களில் காய்கறி அரிசி பால் ரொட்டி போன்ற அடிப்படைத் தேவைகள் அடங்கிய நலத்திட்ட தொகுப்புகளையும் இவர் வழங்கியுள்ளார் மீனாள் அம்மாள்.  

மேலும் மீனாள் அம்மாள் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களின் போது மக்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கியவர்.

திருமங்கலம் தொகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு ஆயிரம் ஆசிரியர்களை நியமித்து மாலை நேர வகுப்புகளை நடத்தினார்.

கிராமப்புற பெண்கள் சுய தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு அது தொடர்பான பயிற்சிகளை அளித்து பயிற்சி முடித்த பின்  கிரைண்டர், தையல் எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களையும் வழங்கி அவர்கள் மாவு விற்பனை,  தையல் என  சொந்த காலில் சிறு தொழில் நடத்தவும் உதவியவர் மீனாள் அம்மாள்.

மேலும் அவரது டிரஸ்ட் சார்பில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் வண்ணம் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தனது மகன் உதயகுமார் அரசியலில் முக்கியமான இடத்தில் இருந்தாலும் எவ்விதமான பந்தாவும் அதிகார மனப்பான்மையும் இல்லாமல் ஏழை எளிய மக்களிடத்தில் உரிமையாக உள்ளன்போடு பழகி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தவர் மீனாள் அம்மாள்.

அவரது மறைவுக்கு திரண்ட கூட்டமும் அவர்கள் வெளிப்படுத்திய கண்ணீருமே மீனாள் அம்மா இறப்பால் ஏற்பட்ட இழப்பினை எடுத்துக்காட்டுகிறது” என்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கதிரவன், முருகன் ஜி, திருமாறன் ,சங்கிலி,  தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களான  எஸ்.பி‌வேலுமணி,  செல்லூர் ராஜு, கே டி. ராஜேந்திர பாலாஜி, வி.வி.ராஜன் செல்லப்பா, ராஜலட்சுமி, டாக்டர் மணிகண்டன், சண்முகநாதன், சி.த.செல்லபாண்டியன் ,இன்பத் தமிழன், எஸ்.டி .கே ஜக்கையன், ரவிச்சந்திரன், தச்சை கணேசராஜா, எம்.ஏ.முனியசாமி, பரஞ்சோதி, முருக்கோடை  ராமர் பி.ஆர்.செந்தில்நாதன் ,குட்டியப்பா, சட்டமன்ற உறுப்பினர்கள் தேன்மொழி, பெரியபுள்ளான், கழக மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், நமது அம்மா ஆசிரியர்  கல்யாண சுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், டாக்டர் சரவணன், தமிழரசன், ராஜவர்மன்,  வி.ஆர்.ராஜாங்கம், நீதிபதி, சதன் பிரபாகரன் ,எஸ்.எஸ். சரவணன், தவசி ,மாணிக்கம், கருப்பையா,  வேலம்மாள் சேர்மன் முத்துராமலிங்கம் ,தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜெகதீசன், கப்பலூர் தொழில்பேட்டை தலைவர் ரகுநாத ராஜா ,அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு, ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.