கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையம் பகுதியில், இந்து முன்னணி முன்னாள் செய்தி தொடர்பாளர் சசிகுமாரின் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும் போது :

இன்று சசிக்குமாரின் ஒன்பதாவது நினைவு நாள். அவரது நினைவு நாள் கூட்டத்தை காவல்துறை கடுமையான கெடுபிடிகளுடன் அனுமதி அளித்து உள்ளது என்றும், அவர் அப்பழுக்கற்ற மனிதர். தமிழக அரசு இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் பயங்கரவாதிகள் மீது கடமை நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகுமார் கொலை வழக்கில் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்றும், இந்த வழக்கில் நிறைய பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வழக்கை நடத்தக் கூடாது என்று பல முயற்சிகள் நடக்கிறது. நடத்தினால் தண்டனை கிடைக்கும், என்பதால் எப்படியாவது ? தாமதப்படுத்த நினைக்கிறார்கள்.
இதில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு ஒரு முறைக்கு பல லட்சம் செலவு செய்யப்படுகிறது. ஒரு வழக்கிற்காக முப்பது வழக்கறிஞர்கள் வருகிறார்கள். இதற்கு ஏது எவ்வளவு பணம். இதில் பல சதி இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோம் என்றும், இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல, அது தமிழகத்தில் ஓட்டு அரசியல் நடக்கிறது. எப்படியாவது ? நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள், உண்மையில் மத அரசியல் தான் நடக்கிறது.
இஸ்லாமியர்கள் ஓட்டுக்காக திராவிட கட்சிகள் கூட்டணி போடுவதை மாற்ற வேண்டும் என்றும், அதே போன்று கும்பகோணம் அருகே திருபுவனம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இப்படி பல கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்படவில்லை தமிழகம் குற்றவாளிகளுக்கு புகழிடமாக மாறி வருகிறது என்ற ஆய்வு வரிசை சொல்கிறது.
பெங்களூரில் குண்டுவெடிப்பு நடந்தால் அந்த குற்றவாளிகளை தேடி கோவைக்கு வருகிறார்கள். அதேபோன்று கேரளா போலீஸ் இன்று வருகிறார்கள், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் எடுத்துக் காட்டாக 1998 ல் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.
அந்த குண்டுவெடிப்பில் பலர் பலியானார்கள் அதில் ஆனால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதில் பலர் கைது செய்யப்படவில்லை அதில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்படவில்லை, என்று மக்களுக்கு அதிர்ச்சி உள்ளனர் எனவும், அபூபக்கர் ராஜாவையும் டைலர் ராஜாவையும் கைது செய்து உள்ளார்கள் அவர்கள் 30 வருடங்களாக எங்கு இருந்தார்கள் அவர்கள் எங்கு ? தங்கி இருந்தார்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் யார் ? அவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் குற்றங்கள் இருக்காது.
2 வருடங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது அதிகாரிகள் அதை சிலிண்டர் வெடிகுண்டு என்றார்கள், ஆனால் தேசிய புலனாய்வு முகமை அதை தெளிவாக கூறி இருக்கிறது.
அந்த வழக்கை எத்தனை பேரை கைது செய்தார்கள். குற்றவாளிகளை காப்பாற்றாமல் அந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.