• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு செயற்குழு கூட்டம்..,

ByKalamegam Viswanathan

Sep 23, 2025

தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலையிலும் மதுரை மாவட்ட கிளையின் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் பண்ணைபட்டி விலக்கில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது அதில் முக்கிய பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1 தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமபுற சாலைகள் இருபுறமும் மரக்கன்றுகள் நடபடவேண்டும்
2 மதுரை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக ஷேர் ஆட்டோக்களுக்கு புதிய உரிமம் அதாவது புதிய பெர்மிட்டு வழங்கப்படாமல் பழைய பெர்மிட்டில்தான் புதிய ஆட்டோகளை வழங்கிவருகின்றனர் அதை மாற்றி புதிய பெர்மிட்டுடன் ஆட்டோ உரிமம் வழங்கபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
3 மாவட்டம் முழுவதும் அனைத்து பால்பண்ணை மற்றும் தனியார் பால்விற்பனை
நிலையங்களில் முறையான பால்பாக்கெட்தான் விற்பனை செய்கிறார்களா என ஆய்வுகள் நடத்தப்படவேண்டும்.
4 மதுரை மாவட்டத்தில் கட்டுமான பணிகள் அதிமாக நடைபெறுகின்ற கட்டுமான பொருட்கள் மணல் எம் சாண்டு பி சாண்டு குவாரி மண் சரியாக கிடைக்காததால் மிகவும் சிரமபடுகின்றனர். எனவே கனிவள குவாரிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும். என கேட்டு மற்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் உசிலம்பட்டி நகரம் சார்பாக சின்னகொடி முத்துமணி திருலோகநாதன் சுருளி சுருளிவேல் காட்டுராஜா ஈஸ்வரி மதுரை மேற்கு தொகுதி வழக்கறிஞர் ஜெய தமிழ்செல்வி சிவா கார்த்திகா திருப்பரங்குன்றம் தொகுதி கலைச்செல்வன் முனியாண்டி சோழவந்தான் தொகுதி ராமு மணிகண்டன் உசிலம்பட்டி ஒன்றியம் மதிவாணன் வீரபுத்திரன் ஈஸ்வரி சித்தன் விஜயலட்சுமி செல்லம்பட்டி ஒன்றியம் ஜெகதீசன் வினோத் ராமர் பிரபு காசிராஜா கெளதம் அன்புராஜன் அரவிந்தன் சேடபட்டி ஒன்றியம் ரத்தினம் முத்துலட்சுமி சுப்பையன் பாலமுருகன் மாயத்தேவர் தங்கமாயன் ஜான் பிச்சையம்மாள் மேரி சுந்தரலட்சுமி எழுமலை பேரூராட்சி கேத்துவார்பட்டி தர்மர் துரைபாண்டி திருங்கலம் தொகுதி முருகேசன் செல்வம் குருசாமி முத்துராஜ் மற்றும்பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.