வண்டலூர் ஓட்டேரி புதிய காவல் நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

வண்டலூர் ஓட்டேரி காவல் நிலையம் உரிய இட வசதி இல்லாமலும் கட்டிடங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக. காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் வண்டலூர் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு புதிய அலுவலகம் கட்ட, காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையுடன் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் 2கோடியே15 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் அதிநவீன காவல் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டன.

அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்த நிலையில் இன்று வண்டலூர் ஓட்டேரி காவல் நிலையத்திற்கான புதிய அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.தாம்பரம் துணை ஆணையாளர் பவுன் குமார் ரெட்டி,சட்ட மன்றத் உறுப்பினர் குத்துவிளக்கு ஏற்றி கட்டிட அறைகளை பார்வையிட்டனர்.